Sunday, February 3, 2013

தனித்த பெண்ணும் தகாத கவிதையும்



எண்ணங்களை உதறிவிட்டு 
நெகிழ்ந்து படுத்திருந்தது மனம் 
என்றுமில்லாதது போல் இன்றவள் 
சூரியனைப் பிடித்து விரல்களுக்குள் நசுக்கியும்
நட்சத்திரங்களை உடைத்தென் கூரைமேல் 
எறியவும் பழகியிருந்தாள் 

என் கிழிந்த கவிதையொன்றை 
வெகுவாய் மெச்சினாள் பாராட்டினாள் 
அந்த நாளில் அவள் காதலன் பிரிந்ததையும் 
விரகதாபத்தில் கைகள் ஊடறுத்து 
உடல் மேல் ஊருவதையும் வெட்கமேயின்றி 
கவிதைக்குள் அவளால் கக்கமுடிந்தது 

விம்மிப் புடைத்திருந்த அவள் உடல்மேல் 
தகித்துப் படர்ந்தன இச்சை நரம்புகள் 
உதடுகள் வெடித்துக் கசிந்தது 
உருகி வழிந்து தாள்களை நனைத்தாள் 
சூடான முத்தத்தை ஆராதிக்கின்றேன் 
ஒரு முறை உன் வலிமையை என்னில் திணி 
உடை தாங்கிய உன் கவிதையை வெறுக்கிறேன் ...??

ஆடையைக் கிழித்தேன் 
கவிதை நிர்வாணமானது 
அன்பானவளே ..!!
இப்போது பிடிக்கின்றதா உனக்கென் கவிதை...?
 

No comments:

Post a Comment