Sunday, February 3, 2013

அனன்மியாவாதல்




உலகைப் பற்றிய நினைப்பே இருப்பதில்லை 
காலநிலை மாற்றம் 
எரிக்கும் வெயில் ,பருத்தியாலான ஆடைகள் 
ஒரு கூடை முத்தம் உதடு நிறைய 
எடுத்து வரும் திமிர் 
சுவையேயில்லா நாளொன்றை 
தன பிஞ்சுக்கரங்களில் பிய்த்து 
போட்டபடி இருப்பாள் 

வெற்றுக்காகிதத்தை நீட்டியபடியே 
அதை ரசிக்கச்சொல்லும் அவள் விழிகளில் 
உலகம் எவ்வளவு அழகாயிருக்கும் ..??
பூக்களே அவள் மொழிகளை 
கைது செய்யுங்கள் .
சூரியனைப் பிடித்துத் தாருங்கள் 
மின்மினிகள் போலியானவை என்பாள் 
குழந்தையாகும் எண்ணமோ 
இளமை பற்றிய சிந்தையோ இல்லை 
காண்பவரை தானாக்கிக்கொண்டிருப்பாள்
 — 

No comments:

Post a Comment