Sunday, February 3, 2013

மோகத்திலிருந்து கவிதைக்குள் ....

இசைப் பிம்பமொன்றின் மொழிகளை தனதிதழ்
அசைவில் கீறல் கீறலாக்கிப் 
பெயர்த்தெறிந்தாள்
காய்ந்து போன உதடுகளால் மூன்று
முத்தங்கள் தந்தாள்,பிடரிமுடியைக் கோதி
சர்ப்பவிரல்களால் பிணைந்திருந்தாள்
நொடிகள் கசிய உருகிய பார்வையில்
பரஸ்பர உரையாடல்களைத் திணித்தாள்

வார்த்தைகளைக் காணமுடியாதிருந்தது
உயிர்களுக்குள் நசுங்கியோ இல்லை
உடல்களுக்குள் சபிக்கப்பட்டோ இறந்திருக்கலாம் 
என்னே..!! நளினமான செய்கையால்
கலைவந்தெழுந்தாடிப் பற்களாலென்
மார்பைக்கடித்து வெளுறிய உதடுகளை
சிவப்பாக்கிச் சிரித்தாள் ..!!

வலியுயிரேறி கைகளாளவளை உதறித்
தனித்தபின்னென் சாணக்கியத்தனமான
புன்னகையொன்றை வீசினேன்
எனது கவிதை பற்றிய கவிதைகளை அவளிடம் காட்டினேன்
மிரட்டல் பார்வையுடன் மௌனம் கனிந்தாள்
கூடவே அவள் விழிகளிலிருந்து
விடைபெற்று வந்தன
கவிதை பற்றிய விளக்கங்களின் உயிர்மை

No comments:

Post a Comment