Sunday, February 3, 2013

மௌனமொன்றால் இறந்தவன்



உலகின் இறுதி மூலையொன்றின் 
நினைவொன்றை சுமந்தவாறே 
உயிரிழந்து கிடந்ததந்த மௌனம் ....
நொடிகளை கசக்கிப் பிழிந்தவாறும் 
உயிரைத் துண்டாக்கிச் சிதைத்தவாறும் 
பிரிவின் பெருந்துயரம் நீண்டது 

மௌனம் சாதித்தல் பற்றி ஆராய்ந்தவன் 
தொண்டைக்குழிவரை பீறிட்ட 
சோகத்தை அடக்கத்தெரியாதவன் 
கூவிக் கூவியழுதான் ....
அன்பே..!! நீ கொன்றுபோட்டிருந்தாய்-
மனதைச் சிதைத்தாலும் அர்த்தம் காணா 
ரணங்களைத் தருகின்றவள் பெண்..?
கண்ணீரின் விளக்கமறியாதவனும்
மரணத்தை மதிக்காதவனும் என்னுலகில்..

மீண்டும் மனமிழுத்தழுமோர் நொடியில் 
குருதி காய்ந்து மரத்துப் போன 
மௌனத்தைச் சுமந்தவாறே காதல் வரும் ,இறுமுறியின்றி 
கல்லாய்ப் போன கன்னியின் பார்வை வரும் 
கூர்மை ததும்பிய அமைதியாலவள் 
கூறு போட்டுக் கிழித்த கவிதையின் மீதம் வரும் 

அத்துன்பமெழுமொருநாளிலென் 
மரணவுடல் முழுவதுமவள் படர்ந்திருப்பாள் 
மௌனம் மரணம் சார்ந்ததெனவுணராதவள்.!!

No comments:

Post a Comment