Sunday, February 3, 2013

உயிரின் விம்பங்கள் காய்ந்த பின் ...



நட்புக்கும் காதலுக்கும் நடுவில் தான் 
நமக்குள்ளும் அந்த வெறுமை 
நான் உடைந்த சிதறல் வழி
நீ நீயாகவே போகின்றாய் 

ஓய்ந்து போன மழைத்துளியில் 
காய்ந்து போன 
உன் உருவத் துருவல்களின் 
சுவையிழத்தலின் நீண்ட வரிகளை 
மேய்கின்றதெனதுயிர்...!!

இருளில் மறைந்து போகும்
காலடி ஓசை நீண்ட கனவுகளை 
ஆராயவைப்பது 
உன் தூர தரிசனம் பிரிவை நோக்கி 
மீண்டும் என் வீதியில் மெர்க்குரிப்பூக்கள் 

யாதுமில்லை நமக்குள் ஏதுமில்லை 
மனது திறந்தே கிடக்கின்றது 
நீ வந்தவழி திரும்பிச்செல் 
நான் சென்றவழி போகின்றேன் 

மண்வாசம் குளிர் காற்று ...மீண்டும் 
மழை தானே ..!!
இது பருவங்களின் நியதி ...

No comments:

Post a Comment