Sunday, February 3, 2013

தேடிய பெண்ணும் தெவிட்டாத உரையாடலும் _1 (காதலாகிக் கசிந்தவர்களுக்கு)


சாயம் கசிந்த உதடுகளால் என்னைக் 
கொன்று உயிருறிஞ்சிக் குடித்தபின் மௌனமானாள் 
விழிகளால் மொழிகளை காயம் செய்தாள் 
சூரியப்பொழுதொன்றில் குளிராகி 
ஈரம் உறிஞ்சிய பின்னும் தீயாகிப்படர்ந்தாள் 
நரம்புக்குள் ஏறி நடைபழகித்திரிந்தாள் 
உயிரீரம் குழைத்து கனவுக்குள் இறங்கிவந்தாள் 

முத்தங்களை சூடேற்றியும் மூச்செரித்து விடைபெறவும் 
காலமழிக்காத காதலிப்போது கனிந்தது,
சுட்டெரித்த அவள் நினைவுகளால் சுழன்றெழுந்து 
உணர்விழந்தடங்கிச் சாய்ந்தேன்,
உருகியெழுந்த காதலினாலுயிர் மிழற்றிச் சாய்த்தாள் 

வார்த்தைகளால் விளையாடிச் சலிக்கவும் 
உயிரின் மெல்லிய நாண்களை வீணை போலவள் 
விரல் மீட்டிச்செல்லவும் அறிந்திருந்தாள் 
நீண்ட இடைவெளியைக் குருடாக்கி வெளிவந்து 
தீர்ந்த உரையாடலோ காதல்வயப்பட்டு வீழ்கிறது 
காலம் நினைவுகளை ஆழ்கிறது ...!!

(பெண்ணே காதல் என்றால் என்ன ...?

No comments:

Post a Comment