Wednesday, December 26, 2012

அர்த்தமில்லாக் கவிதை (4)



அவர்களின் வாசல்
திறந்து கிடக்கின்றது
இது ஈரம் காயாதவன் இதயம்
மரணத்தின் சாலையில்
திசைகள் மறுப்பு...!!

உன் கடன் விழிப் பார்வையின்
கவர்ச்சி ..புற்களில் நீ
புழுதி ..நம் எதிர்களில்
வெறுமை ..அவர்கள் இவர்கள்
எவர்கள் என்றும் வினாக்கள்

சென்றுடைந்தது இன்பம்
நின்றாடுது விதி வசம்
கனவுகளில் இருளின் துளி
பாதை திறந்தே கிடக்கிறது
காலுடைந்து செருப்பறுந்த நான் ..!!

மனிதன் நிறம் மாறுவது இயற்கை
மனதின் நிறம் மாறுவது ..??
நீ அவன் போல் இல்லை
நான் நீயாவது நியதி

காற்றின் சத்தம் மௌனம்
உயிரின் சத்தம் மரணம்
பிறப்பிலிருந்து உனை
பற்றிக் கொள்கின்றது
யோனி அழுக்கு

இரக்கமில்லாதவர்கள்
மன்னிப்பை மறந்தவர்கள்
நிழலில் நடிப்பவர்கள்
உன்னால் எரிபவர்கள்
அவர்கள் பெயர் மனிதர்கள்

சுவை தேடும் உன் நாக்கு
உன் வாயை சுவைப்பதில்லை
உப்பு பிறந்த கண்ணீர்
ஊன் பிறந்த செந்நீர்
எல்லாம் அழுக்கு

அழுக்கொன்றை அழுக்காக்க
முடியாது உன்னை..??
அழுக்குக்குள்ளே உயிர்
குப்பைக்குள் வைரம்
வேருக்குள் நீர் ..!!
 

No comments:

Post a Comment