Sunday, September 30, 2012

அர்த்தமில்லாக் கவிதை


அர்த்தங்கள் அற்ற வாழ்வொன்றில் 
பயணிக்கின்றேன் 
என்னிடம் கேட்கப்படாத 
கேள்விகளுக்கு 
விடை தேடுகின்றேன் 

புகையாகிப் 
போகின்றதுனதுயிர் 
எங்கே 
பயணப்படுகின்றாய் நீ..??

புதிர்க் கற்களை 
வேகமாய் எறிந்துகொள் 
பூட்டி வைத்த
உன் மனதை உடைத்துவிடு 

நீ ஏற்றிய விளக்கில் 
எரிகின்றாய்-அவன் 
காட்டிய பாதை 
உனக்கானது அல்ல 
வாடகையில் நடக்கின்றாய் 

உதிர்ந்த 
இலையொன்றில் தான் 
ஒட்டிக்கொள்கின்றன 
தூசிகள் 
முறிந்த கிளையை 
தான் மூடிக்கொள்கின்றன 
பிசின்கள் 

உலர்ந்த வாழ்வை 
உதறிவிடு 
கண்ணீர் மனிதனின் 
மகத்தான தீர்த்தம் 

வலிகளின் பின் தான் 
யுத்தம் 
யுத்தத்தின் பின் 
வலிகள் பிறப்பதில்லை 

நான் என்னை புரிந்து 
கொள்ள விரும்பவில்லை 
உன்னை நன்றாக புரிந்து 
கொண்டேன் 
என் எழுத்து கத்தி
எடுத்துக் கொள் 
என்னைக் கொல்வதற்க்காவது
பயன்படுத்து...!!

No comments:

Post a Comment