Friday, September 21, 2012

உடைந்த நட்சத்திரம்



அந்த 
இருள்தோய்ந்த
நிலவொளியில் 
விட்டில்களை 
வதம் செய்யும் 
முடிவொன்றை எடுத்திருந்தாய்

நான் ஜனநாயகம் 
என்பதை உணரா 
சர்வாதிகாரி -நீ 
எனக்கான
சுதந்திரத்தை 
மறுத்திருந்தாய்

நமக்கான 
இன்பக் குவளை
நிரம்பியிருந்தது
அதிஷ்டங்களை 
பருகிவிட்டு 
துரதிஷ்டங்களை 
விட்டுச்சென்றாய் 
குவளையையும் மிச்சம் 
வைக்கவில்லை நீ 

முத்தம் தருகையில் 
விசேடமாகத் தெரிந்த 
உன் உதடுகளில் 
விஷமம் தடவப் 
பட்டிருந்தது 

மீண்டும் -நடுவானில் 
அந்த 
உடைந்த நட்சத்திரங்கள் 
நமக்கான 
இடைவெளியை 
மின்னியபடி...!!

No comments:

Post a Comment