Friday, September 21, 2012

காதல் கொலைகாரி


காதல் 
கொலைகாரி 
உன் செழித்த விழியில் 
முளைத்த காதலும் 
கருகிப்போச்சு ..!!
பாலை பூத்தாச்சு ...

சினத்த 
வார்த்தை வீசி எறி 
உயிர் 
கனத்துப் போச்சு 
உதறித் தள்ள 
ஆசை தடுத்தாச்சு..!!

கருப்பணி போல 
இனிச்ச 
உன் பேச்சு 
கள்ளாய்
புளிச்சுப் போச்சு
அடி என்னாச்சு ...!!

ஹிட்லரின் 
வன்முறைக் காரண 
சிந்தியா நீ 
உன் உண்மை 
அன்பின் நிலை 
சிந்தியாமல் நீ ...!!

காதல் வலி(ழி)களில்
கல்லறை கட்டும் சாஜகானின் 
தங்கச்சி நீ...!!
கோபக்கனல் 
ஆணைக் கொள்ளும் 
உன் கட்சி தீ ..!!

இரக்கமில்லா 
இன்னிசையே 
எனக்காய் மரணகானம் 
இசைப்பாயோ 
மனம் தின்று 
ஏப்பம் விடும் மலரே 

வதைகளால் 
புதைக்கின்ற 
வாலிபக் குகையே 
ஊடலில் 
பேரு ஊடல் 
உன் பிரிவோடல் 

என் மனதோரத்தில் 
கொஞ்சம் ஈரக்காதல் 
அது குருதியா 
இல்லை என் 
இறுதியா...??

No comments:

Post a Comment