அன்றெல்லாம்
அந்தப் பெண்
பருவமடைந்திருக்கமாட்டாள்
மழலையாய்
புழுதிக்குள்
கைகளை புதைத்தபடி...
மின்னிய சூரியக்
கீற்றுக்களை விழுங்கிடும்
விழிகளை சிமிட்டியபடி
இப்போதெல்லாம் ...??
பருவம் கடந்து
பேரர்கள்
பூட்டர்கள்
கிளைவிட்ட உறவுகளுடன்
சுருங்கிய
கண்களால் என்னைப்
பார்த்தபடி...என்னிடம் ஏதோ
கேட்கின்றாள் ...??
எத்தனை ஏக்கங்களை
துக்கங்களை
வேதனைகளை
மீண்டும் அவள்
வழியைப் பாடினாள்
கணவனாய் என்னை
இரவுபகல் சீண்டி...
பிள்ளையாய் என்னை
அடித்து உதைத்து
பேரராய் மாறி
கன்னத்தில் கிள்ளி
பேரர் வழி மக்களாய்
எனைப் படுக்கையில் போட்டீர்
பூமித்தாயின்
பாடல் முடிய ...
நான் அவள்
போக்கை வாய்ச்சிரிப்பை
ரசிக்கின்றேன் ...!!

No comments:
Post a Comment