விசத்தேன் கலந்த
உன் வார்த்தைகள் முழுதும்
பொய்மையின் ஈரம்
உப்பிக்கிடக்கின்றது
நீ பிளவு வேலிகளை
வேயத்தொடங்கிவிட்டாய்
நரகத்தில் இருந்தும்
பாதாளத்திலிருந்தும்
ஒரு நாரைக் கிழித்தெடுத்து
உடைந்திருக்கும் எனதுயிரை
கோர்க்கத் தொடங்கிவிட்டாய்
ஒளி அறுந்த நிலவொன்றின்
வலித்துகள்கள்
இருளை நோக்கி
வீசப்படுகின்றன
அந்த வலிகளெங்கும் -நீ
நினைவுகளாக்கப்படுகின்றாய்
உயிர்களைந்த
தசைக் கூடொன்று இங்கே
பயணப்படுகின்றது
நீ முள் விதைத்த
விழி வயல்களில் ...!!
நமக்கான
தூரப்படுதல்
வேகப்படுகின்றது
உணரப்படுதலின்
உடைசல்களின் வழிகளில்..!!

No comments:
Post a Comment