மரணம் தின்கின்றாய்...!!
ஈமவிளக்கொன்றின் கணப்பொழுதில்
எரிகின்றதுன்னுயிர்
இறுமுறியின்றி சாம்பலான
உன் வீரப்பாடல்களை
காற்றில் எறிகின்றாய்
பிரேதக்காட்டின் நிலப்பரப்பில்
உன் உணர்வுகளின்
குறட்டை ஒலிக்கின்றது
புண்ணீர் கலந்த உன்
புதைகுழியெங்கும்-இனத்தின்
கண்ணீரின் உப்புத்துகள்கள்
பிணநரிக்கூடோன்று
திறக்கின்றது
சதைமணம் புசித்துச்-
சிதைக்கப்படுகின்றாள் -உன் சோதரி
சகித்து சகித்துப்
பாரிய புண்ணாகின்றாய் நீ
மீண்டும்
வெள்ளிடைப்பட்ட-உன்
உணர்சிகளை -காலத்தின்
ஏப்பத்தில் உணர்கிறாய் நீ ..!!

No comments:
Post a Comment