Friday, September 21, 2012

துளி மேல் துமி


மண்மேல் காதல் 
கொண்ட மழைத்துளியொன்று 
உன் மேல் 
ஆசை கொண்டு 
அந்தரத்தில் நின்றது 

கூந்தல் வழி வீழ்ந்த 
குதூகலத்தில் 
ஆடைகளுக்குள் 
புகுந்து 
ஆவி உயிர்த்தது 

குழந்தையாய் குதித்தாய் -உன் 
கைகாளால் உன்னையேன்
இறுக்கிக் கொண்டாய் 
உன் மார்புக்குள் 
மழைத்துளி ...??

துளித் துளியாய் 
சிந்தியது -அதன் 
உயிர் வலி....

உன் கை அளைதலில்
வெட்கம் கொண்டும் 
மெய் நுழைதலில்
சிக்கிக் கொண்டும் 
சாகின்றது ...!!

அந்த பேய்மழை 
அணைக்கவந்த
பூமழை நீ 
மழை மேல் 
துமிக்கின்றாய் 
கூச்சங்களை ...!!

மழைத்துளியொன்று 
சாகின்றது -உன் 
வெப்பக் 
காதல் 
வாழ்கின்றது ...!!

No comments:

Post a Comment