ஒரு சில நாட்களை
இழந்த நாட்காட்டியில்
ஞானம் பிறந்தது ...!!
ஞானம் தெய்வீகமா? -இல்லை
தெய்வீகமாக்கப்பட்டது
இறை செயலில்லை
இரு கோட்பாடுகள்
அடக்கியது...!!
நாட்கள் இழத்தல்
இன்பமானது
ஏதோ ஒரு வகையில்
வாழ்க்கை ஓடாது
வாலிபம் தீராது
நிச்சயமாய்
குழந்தைகள்
குழந்தைகளாகவே இருப்பர்
மீண்டும்
ஞானம் பிறந்தது
தெய்வீகமக்கப்படாது
மனிதமாக்கப்பட்டது .....
மனிதன் மனிதனாகும் வரை
ஞானம்
தேடலாக்கப்பட்டது ,,..

No comments:
Post a Comment