Wednesday, September 5, 2012


அவள் சமைக்கின்றாள்
என்னை 
நான் உணவு 
தயாராகின்றது -அவள் 
வாய்வழி வெளிவந்த 
சுடுவார்தைகளால் 
வறுக்கப்படுகின்றேன் 

நளபாக 
உச்ச ஸ்தாயியிலிருந்து 
நான் எழு சுவை 
உணவாய்
வெளிவருகின்றேன் ...!!

அவள் கைப்பக்குவத்தில் 
பருக்கைகளாய் 
ஒட்டிக் கொண்டு 
மௌனமாகின்றேன் -
அவள் விரலிடை 
புசித்து புசித்து 
நான் சுவை தின்கின்றேன்...!!

No comments:

Post a Comment