காலை
மாலை
உருக்கியழித்துச்
சிதைந்து சின்னாபின்னமாக்கிய
தசை வழிச் சிதறல்களாய்
ஒன்றிரண்டு
வியர்வை வரிகள் ...!!
கைக்குட்டை
கனக்கிறது
ஈன விதைகளாகிப் போனோம்
பூக்கின்றோம்
காய்க்கின்றோம்
பழுக்க மறந்து விட்டோம்
முயற்சி
மூச்சுக்கள் விடுகின்றோம்
கனக்கும்
இதயங்களில்
காற்றடித்துக்
களிப்படைகின்றோம்
உயிர்ச் சலவை
செய்கின்றோம்
ரொட்டித்
துண்டொன்றுக்காய்
மல்லர்களாகி...!!

No comments:
Post a Comment