Sunday, September 30, 2012


பிணியானோம்....

மரணப்படலையின் 
இறுதிச் சலாகை வரை 
தொங்கியதெனதுயிர்
நான் உன்னிடம் 
விடைபெறுவதற்கும் 
நீ என்னிடம் -வினா 
தேடுவதற்கும் முயற்சித்துக் 
கொண்டிருந்தாய் ..!!

என் இறுதிக்கால இசையின் 
நான் முழங்கிய கணமொன்றில் 
நீ மீண்டும் 
எனதுயிரை வாசிக்கத் 
தொடங்கியிருந்தாய் ..!!

உன் இடைநழுவிய பாவாடை 
வழி அனுமானிக்கப்படிருந்தது-நீ 
இழந்த நாட்களும் 
அடைந்த வலிகளும்

பிணவறை வழி 
நகர்கின்றதென் நான்குசில்லு 
மரணவண்டி -நாதியற்று 
நாறுகின்றேன் நான் 
சவக்கூடம் எங்கும் 
சாவை நோக்கிய சபதங்களை 
எறிகின்றேன் ....

மரணமே....
மறுபிறப்பே....உதிர்ந்த 
சிறகே 
உடைந்த கிளையே...!!

No comments:

Post a Comment