Sunday, September 30, 2012


கள்ள மனம் 

காதல் பொழுதொன்றில் கரைந்து 
நீ போகின்றாய் 
மோதல் கொண்டிரு மூச்சினை 
ஆழ்கின்றாய் -சாதலின் வேதமாய் 
சாத்வீகம் கொள்கின்றாய் 
மீதம் இன்றியே நீயேன் 
மூச்சினை உரிகின்றாய்..??

கூதல் குளிர்வெளியில்
போர்வைக்குள் தேங்கினாய் 
போதும் ஒழி மறுத்து-முத்தப்
போதையை ஊற்றினாய் 
காதில் சிணுங்கி இன்பக்
காட்சியை உளறினாய் -ஊடும் 
வேதமேன் சொல்கிறாய்..??

பாயும் மனவொளியைப்-பந்தாடிப் 
பார்க்கின்றாய்-உடல் 
காயும் இரவொன்றில் -வெட்கங்கள் 
தோய்க்கின்றாய்-நீயும் நானுமாய் 
நிலவிளைத்துப் போகின்றது 
ஓயா முத்தங்களின் 
ஓசை வெடிக்கின்றது ...!!

சாயும் உன் கூந்தல் வலை -எனை 
சாவடிக்கும் நேரமொன்றில் 
வாயில் தீமூட்டி என்னில் 
தெளித்திருப்பாய் -மறுகணமே 
காயில் கனித்திருக்கும் சுவையொன்றைக் 
கண்முன்னே காட்சி செய்வாய்-உயிர் 
மேயும் உன்கண்ணில் இறங்குதென் 
கள்ள மனம் ...!!

No comments:

Post a Comment