Friday, September 21, 2012

உவரி நடுவே ஊமத்தை


அந்த அந்தியின் 
வேட்கை தணிந்தது ...

சிந்திய குருதி வடிந்து
காலிடுக்கில் சீழ் கசிந்து 
மார்புடைத்து 
வீரிட்ட கூச்சலுடன் 
அலறி வெளித்த
பாவ ஜீவன் ...!!

கட்டியணைத்தாள்
முத்தமிட்டு 
உமிழ்நீரிலும் 
கண்ணீரிலும் 
உடல் கழுவித் தெளிந்தாள்...!!

வாசல் வழி-மின்னிய 
சிவப்பு ஒளி
இவன் பரிசுத்தம் 
பறைசாற்றிற்று...

மறுநோடி
அலட்சியக் குறி ...!!
அசுத்த ராத்திரிகளால் 
மேயப்பட்ட -இவன்
அன்னையின் சீம்பாலருந்த 
தயாரானான் 
தா(சி)யின் இன்றைய கணவன்.......!!

No comments:

Post a Comment