நிலவு வெட்கம் பிறந்து வரும்
நீயென்ற ஓர்வார்த்தை
நின்றாடும்
உள்ளமதில்
உன் கண்ணருகில்
கைத்தடங்கள்
சென்றாடும் ...!!
பூக்கம்ப மேனியிலே
பூகம்பங்கள்
வந்தாடும் ...!!
நீ வசந்தம் வீசியதாய்
உயிர் கூறும்...
மெல்லிடையை
கைகள் பற்றி
உடல் உடலில் தைத்தலால்
தையல் மொழி
வெட்க வழி விட்டோடும்
கட்டியணைத்து கைகள்
நடை புனைந்து
காம மழை துய்த்தலால்
உடை விலகும்
உன் உயிர் மேல் -என்
உயிர் உலவும் ..!!
கோடை வெம்மை
போர்வைக்குள்ளே
பனி பொழியும்
விளக்கொளியில்
வெட்கம் சேர்ந்து
ஒன்றணையும் ...!!!
உன் நகம் வரையும்
ஓவியங்கள்
என்னுடலில் வெளிச்சமாகும்
இன்ப ஜன்னல்
திறந்து சுவைத்
தென்றல் வரும் ..!!
நீ பேசும் வார்த்தையிலே
இரவுகளும்
மூர்ச்சையாகும்
வெண்ணிலவும்
விழிகள் மூடி
நமை ரசிக்கும்...!!!

No comments:
Post a Comment