எனதுகளின் குறிப்பு
எனதுகளில் வரையப்பட்ட
அவள் ஓவியங்கள்
வித்தியாசமானவை
புள்ளிகள் கோடுகளின்றிய
பிரமாண்டங்களால்
தோய்க்கப்பட்டவை
எனதுகள் மரணிப்புகளில்
மாய்க்கப்பட்டவை
இருண்டவை
இனிமை தராதவை
ரணங்கள்
கணம் கணமாய் வாங்கியவை
எனதுகள்
எனக்கானவையல்ல
அவளுக்காக எழுதப்பட்டவை
மௌனத்தால்
சிதைக்கப்பட்டவை
வலிகள் விதைக்கப்பட்டவை
அவளியல் அறியாத
எனதுகள் பாவப்பட்டவை
கண்ணீரில்
மூழ்கிச் செத்துப் போன
அவள் நினைவுகளால்
அனாதையாக்கப்பட்டவை
இருந்தும்
எனதுகள் உனதுகளாக்கப்பட்டவை...!!

No comments:
Post a Comment