Wednesday, August 22, 2012


இராக்குழந்தை 

வானச்சேலையின் 
முந்திவிலக்கி
பூமித்தாயின் 
பால்குடிக்க 
வருகிறது மழலை 

தாய்மையின் 
துடிப்புகளில் -விசிறப்பட்ட 
பால்வகை 
மேகக்கூட்டங்களை 
அள்ளிப் பருக்கிக் 
களைப்படைந்த நொடியில் 
சுவாச அந்தத்தின் 
உச்ச முடிப்புகளில் 
தெளிந்த 
வியர்வைத் துளிகளாய் 
நட்சத்திரங்கள் 

இருண்ட கானத்தின் 
விழிப்பரப்பில்
நாதம் பிறக்கின்றது 
எச்சில் உமிழ்தலின்
ஊற்றெடுப்பில்
தண்மை வழிகின்றது ...!!!

No comments:

Post a Comment