Friday, August 24, 2012


அவளான பொழுதுகள் 


நான் அவளான 
பொழுதுகளில் விந்தைகள் 
வெளிச்சப்பட்டன 
சில நெருடல்கள் ..!!
சிலவருடல்கள் ...!!
தீக்கிரையாவது 
அவள் பொழுதுகளில் 
மாத்திரமே சாத்தியம் ...!!

அவளான பொழுதுகளில் 
சப்திக்கும் 
இரண்டு எதிர்களும் 
விரகதாபம் கொண்டு 
சீண்டுதல்கள் தொடரும் 
இதயத்துருவங்கள் 
இணைகையில் 
காலநிலை கவிதை சொல்லும் 

தீர்க்கமில்லா -அவள் 
பொழுதுகளில்
எனது சூரியன் 
மழை பொழியுமவள் 
மேக உலகத்தில் 
வட்டமிடும் ...!!
வானவில்லுக்குள் 
கண்ணாமூச்சியாடும் 
அவள் அழகுக்குள்
மெல்ல மெல்ல 
ஒளிந்து கொள்ளும் ...!!

நான் அவளான 
பொழுதுகள் 
வெறுமை தோய்ந்திருந்தாலும் 
கனவுகள் தேங்கியதால் 
நிரம்பி வழியும்...!!

No comments:

Post a Comment