Wednesday, December 26, 2012

நரகக் குழியுதிர்க்கும் நாற்றம்


எரிக்கின்றாய் -என்னை
வெறிக்கின்றாய்...சிரிக்கின்றாய்
குழந்தையாய் தவழ்கின்றாய்
புழுவாகிப் பூரானாகி
ஊருகின்றாய்....நரகமொன்றில்
கூர்ப்பிழந்து
தாவும் வழி தேடுகின்றாய்

உண்டு உடுத்துக்
கழித்துச் சப்பித்
துப்பிவிட்டுச் செல்கின்றாய்
என்னை
என் ஆழ்ந்த கனவொன்றில்
தோன்றிய பச்சோந்தி
உருவம் நீ

எப்படி உன்னால் மட்டும்
கனவின் நிறமாயும்
உயிரின் நிறமாயும்
மாற முடிகின்றது ..??

தலை சிதைத்தல்
உடல் நசித்தல்
சகித்தல் புண்ணாதல்
உன் வித்தையின் ஈரம் காயமுன்
கதவு தட்டுகிறானுன் சித்தப்பன்

மாயே மாயே
ஊற்றைக் குழிகளாம்
ஒன்போதும்
நாறும் சகதியும் பெருங்குட்டையும்
சிரங்கும்

காமப் பசியோடு
என்னைக் காண் அன்று
நானுனக்கு சுவையூறும்
விருந்தே
மாயே மாயே

நரகம் செல்லும் வழி
தெரிகின்றதா?
 — w

No comments:

Post a Comment