Wednesday, August 22, 2012


நானாகியவன் 

பதில் இல்லாக் 
கேள்விகளிடையே 
புதிராகிப் போனான் 
விழிகளை ஈரமாக்குதல் 
விரல்களை 
வேரறுத்தல் 
மறுப்பில் பிறத்தலில் 
நானாகியவன் ...!!!

மௌனத்தை தின்று
வார்த்தைகளை 
எச்சம் ஆக்கினான் 
ஈன ஜனித்தலில்
திணித்தல் 
இவனுக்கானது

நானாகியவனின் 
கடமைகள் 
புனிதம் கெட்ட
பாதைகளில்-சிலுவை 
சுமத்தல் 
நரகச் சலாகைகளில் 
நியாயத்தை 
அறைந்து கொள்ளல் ...

ஜனனம் உறங்கிக் கொண்ட 
இவன்
இருள் தோய்ந்த
வழிகளில் 
மலர்ந்திருக்கும் 
பிணங்களின் வாசமும்
அகோரிகளின் பிதற்றலும் 

நானகியவன் 
உயிர்க்க மறந்தவன் 
உரிமைகளை 
மறுத்தவன் ...!!
ஏன் என்பதில் 
நானாகியவன்...!!!

No comments:

Post a Comment