Wednesday, August 22, 2012


நீ பெரியவளாகிவிட்டாய் 

நீ பெரியவளாகிவிட்டாய் 
பெரிய மனுசி நீ
உன்னிடம் சில புதிய 
குணங்களும் 
பூப்படைந்து விட்டது 

உன் வயது நிறைந்த 
குழந்தைத் தனங்கள் 
காணாமல் போய் விட்டது 
இன்றெல்லாம் 
நீ நீயாகவே 
நடந்து கொள்கிறாய் 

நாம் அன்று 
குடிசை அமைத்து 
சமைத்து விளையாடிய 
மண்சட்டிகள் 
வயதுக்கு வந்திருந்தால்
என் நிலை என்னவாயிருக்கும் ..??

துடுக்குத் தனங்களையும் 
துடிப்புகளையும் 
உன் தாவணி 
ஒளித்துக் 
கொண்டிருக்கின்றது 

அன்று 
கொஞ்சல் பூசும் 
முகங்களில் இன்றெல்லாம் 
மஞ்சள் பூசிக்கொள்கிறாய் 
கூடவே
வெட்கங்களையும் சேர்த்து...!!

உன் 
சிறுபிள்ளைத்தன
விளையாட்டுக்களை 
நான் மீண்டும் தேடுகின்றேன் 
இந்தப் பூப்படைதலில் 
அவை எங்கு 
புதைக்கப்பட்டனவோ???

No comments:

Post a Comment