நான் மரணித்திருந்தேன்
(உதரம் உரைத்தல்)
நான் மரணித்தலில்
மௌனப்பட்டிருந்தேன்
என் வானத்தில்
என்புகள் வெளித்த
நட்சத்திரங்களும்
பட்டினி நிலவொன்றும்
பிரகாசிக்கத்
தொடங்கின ...!!
எங்கும் நடக்கும்
பட்டினிப்படுதல் என்
இரவுகளைப் புசிப்பது
சாத்தியமற்றது
குருதிகள் காய்ந்த
தசைகள்
உணர்சிப்படுதல்
விந்தையானது
பக்கத்துக்கு வீட்டு
விருந்து வாசம்
மூக்கில் நுழைவது
நரகம் உணர்வது ...!!
என் வீட்டுப் பூனை
எதிரிலே எலியை
புசித்து ஏப்பம் விடுதல்
எரிச்சல் தருவது
பட்டினிப்படுதலில்
எத்தனை இன்னல்கள்
ஏழைகள் ராச்சியத்தில்
பசி செய்த
தவறொன்றிற்க்காய்
தண்டனை ஏற்று
நான் மரணித்திருந்தேன் ...!!

No comments:
Post a Comment