Thursday, July 19, 2012

ஈன யுத்தம்


துப்பாக்கி
முனைகளில் சிக்கிய
துப்பட்டாவின்
கனவுகள்
சல்லடையாக்கப்பட்டன ...

சாக்கடை விழுங்கிய
சப்பாத்துக் கால்கள்
என்
பூக்கடை மேனியில்
புலம் பெயர்ந்தன

பங்கருக்குள்ளே
பரவசம் அடைந்திருந்தேன்
என் வெள்ளை
ஆடை நிறம் வெளிறிச்
சிவப்பாய்ப் போனது

ஈனக் கரங்களுக்கு
ஈய்ந்து கொடுத்து
ஓய்ந்து போய்
சோர்ந்து போன
இள முலைகள் ...

காதலனுக்காய்
காவு கொடுக்க
காத்திருந்த
இச்சை இளமேனி
நோவுகள் புகுந்தன ...!!

இருண்ட என் கண்கள்
இரவு பகல்
மறந்தன ...

அருகே இரு
துச்சர்களின் தொடையிடுக்கில்
மாட்டிச் சிதைந்தனர்
சேயாக்கப் போகும் தாயும்
தாயாகப் போகும் சேயும்...!!

No comments:

Post a Comment